காரமடை வேதாத்திரி மகரிஷியின் அறிவு திருக்கோயில் மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மன்றத் தலைவர் துணைப் பேராசிரியர் சுரேஷ்குமார் அவர்கள் ஆலோசனையின் படி நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு. மாசிலாமணி அவர்கள் இறைவணக்கம் குரு வணக்கம் பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
துணை பேராசிரியர் சுகுணா ராணி அவர்கள் தவம் நடந்தினார். தொடர்ந்து மன்ற செயலாளர் சத்யமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். திரு கோபால்சாமி அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றினார். அடுத்து சிறப்பு தம்பதியினருக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது .
திரு மதி சரஸ்வதி அவர்கள் மனைவியின் மாண்பு என்ற தலைப்பில் உரையாற்றினார் மனைவி நல வேட்பு நிகழ்ச்சியை துணைப் பேராசிரியர் ஜெயக்குமார் அவர்கள் நடத்தி வைத்தார், துணைத் தலைவர் ஏ .எம் ராஜ்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவின் நிறைவாக திரு.நாகரத்தினசாமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்