கரூர் கூட்டநெரிசலால் 40 பேர் மரணம்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நெருக்கித் தள்ளலால் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகிறது. இனி அனைவருக்கும் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அந்த கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட சிலர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 24 காவல் மரணங்கள் பதிவாகியுள்ளன. காவலில் ஏற்பட்ட சில மரணங்களைப்பற்றி கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், கடந்த 06.10.2024 அன்று சென்னை மாரினா பீச்சில் நடைபெற்ற இந்திய விமானப்படை ஏர் ஷோ நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த மரணங்கள் தீவிர வெப்பத்தால், நிகழ்ச்சி நிர்வாகம் மற்றும் காவல் பாதுகாப்பில் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது. ஆனால், யார் மீதும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிய வருகிறது.

தற்போது, கரூர் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அங்கு உளவு துறை கூட்ட அளவை துல்லியமாகக் கணித்திருக்க வேண்டும். போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறை அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்திருக்க வேண்டும். அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்.

எனவே, தமிழ்நாடு காவல் துறை மற்றும் உளவு துறையின் அலட்சியத்தை அரசு மற்றும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனென்றால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மாநில காவல் துறையின் பொறுப்பு. ஆனால், 40 உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சில தனிப்பட்ட நபர்களை குற்றம் சாட்டுவதற்காக வழக்கு பதிவு செய்து காவல் துறை தப்பிக்கக் கூடாது. காவல் துறைக்கு முதன்மை பொறுப்புள்ளது.

மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆய்வு நடத்தி மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் வழிகாட்டும் நெறிமுறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.

ஏனென்றால் அடுத்த கூட்டம் புதுச்சேரியில் நடைபெறவிருக்கிறது என்று தகவல் கிடைக்கிறது. மேலும், புதுச்சேரி காவல் துறையின் பல அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால், பொதுப் பாதுகாப்பும், செயல்திறனும் கேள்விக்குறியாகின்றன.

எனவே, உரிய நடவடிக்கைகள் வேண்டும் என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் கோரிக்கைகள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *