திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உதவி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார்.
நாட்டு நலப்பணித்திட்டத்தை வலங்கைமான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரைசாமி தொடங்கி வைத்து மாணவர்கள் திட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், சமூகத்திற்கு நம்மால் ஆன பங்களிப்பை செய்ய வேண்டும் எனவும், நாட்டின் நிலைப்பாடு திட்ட செயல்பாடுகளில் ஈடுபடும் பொழுது கவனமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு பள்ளிக்கு நற்பெயரை பெற்று தர வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
திட்டத்தில் இணைந்துள்ள மாணவிகள் சமூகத்திற்கான தங்களது பங்களிப்பை வழங்குவதற்கான உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வின் போது விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவிகளுக்கு தேவையான ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான சீருடைகளை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஆசிரியர் சம்பந்தம், வலங்கைமான் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜு, அருண் ஆகியோர் உடற்கல்வி ஆசிரியை சாந்தி மற்றும் மாணவிகளிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள், இறுதியாக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.