கோவை
கரூரில் த.வெ.க பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,மறைந்த ரத்தினபுரி ஸ்ரீ ஹரி டெக்கரேஷன் உரிமையாளர் ராம்குமாருக்கும் கோவையில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும்,உடல் நல குறைவால் மறைந்த ரத்தினபுரி ஸ்ரீ ஹரி டெக்கரேஷன் உரிமையாளர் ராம்குமாருக்கும் கோவை ரத்தினபுரி பகுதியில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷனின் கோவை மாவட்ட தலைவர் தங்கவேல், செயலாளர் நந்தகோபால், பொருளாளர் மஹாலிங்கம், மாநில அமைப்பாளர் சுந்தர ராஜ், வடக்கு பகுதி தலைவர் ரமேஷ், செயலாளர் அலெக்ஸ், பொருளாளர் மணி, மற்றும் வடக்கு பகுதி பொறுப்பாளர்கள்,குழந்தைகள், பெரியவர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து மறைந்த ரத்தினபுரி ஸ்ரீ ஹரி டெக்கரேஷன் உரிமையாளர் ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் 2லட்சம் நிதிஉதவி கொடுக்கப்பட்டது.