மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழுத் தலைவர் ஆர்.சுதா எம்.பி தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மக்களவை உறுப்பினரும், குழுவின் தலைவருமான ஆர்.சுதா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் துறை சார்பில், செயல்படுத்தப்படும் திட்ட செயலாக்கங்கள் குறித்தும், ஒவ்வொரு திட்டத்தின்கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர், திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போதுவரை இலக்கீடு எவ்வளவு எய்தப்பட்டுள்ளது.
என்பது குறித்தும் எம்;.பி. சுதா ஆய்வு செய்தார். அப்போது, அவர் அரசு வழங்கிய திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்துள்ளதா என்பதை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கண்காணிப்புக் குழு தலைவர் சுதா எம்.பி.யிடம் தெரிவித்தனர்.
மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், திட்டப்பணிகளை தரமாகவும் விரைந்து செயல்படுத்தியும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அறிவுறுத்தினார். முடிவில், கரூரில் உயிரிழந்த பொதுமக்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் கோகுல் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.