செங்குன்றம் செய்தியாளர்
கரூரில் நடந்த த.வெ.க தலைவர், நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது உலுக்கியது.
அதனை முன்னெடுத்து தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் கொளத்தூர் பாலாஜி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் 41 பேர்களுக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக அனைத்து வியாபாரிகளும் ஒன்றிணைந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி தூவி அஞ்சலி செலுத்தினர் .
இந்நிகழ்வில் சென்னை மாவட்ட தலைவர் அருணாசலம் ,தலைமை நிலைய செயலாளர் குழந்தைவேலு, மாநில கூடுதல் செயலாளர்கள் ஜெயராமன், முனீர், மாநிலத் துணைத் தலைவர் மதுரை நாயகம் மாநில இணைச்செயலாளர் வே . பத்மராஜ் செய்தி தொடர்பாளர் எம் பி ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சுவை டி .ராஜா வே. செல்வநாயகம் ,எம். நாகராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கொளத்தூர் ரவி செய்தியாளர்களிடம் கூறும்போது
பொதுவாக ஒரே நேரத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் சுமார் 75 ஆயிரம் பேர்களுக்கு மேல் இருந்தாலே ஒரு காவல் நிலைய அமைக்கக்கூடிய அளவுக்கு இந்த அரசு இருக்கிறது. அரசும் நல்ல திட்டங்களுடன் பாதுகாப்பு அம்சங்களுடன் காவல் நிலையங்கள் உள்ளது.
ஆனால் சில உயர் காவல் அதிகாரிகளின் அழுத்தத்தினால் சில தவறுகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. காவல்துறை மக்களுடன் இணைந்து பணியாற்றினால் இது போன்ற தவறுகள் குறையக்கூடும் வாய்ப்புகள் உள்ளதாகவும் , இந்த சம்பவத்தில் ஐந்து வணிகர் குடும்பங்கள் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் மக்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கும்படியும் தெரிவித்தார்.