கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ முன்னிலையில் கல்லூரி கலையரங்கத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இணைச் செயலர் ஆர். வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா கல்லூரி துணை முதல்வர் வி. வாணி ஆகியோர் பங்கேற்றனர் ஒவ்வொரு துறை பேராசிரியர்கள் மாணவிகள் கல்லூரி அலுவலர்கள் கொலு பூஜையை சிறப்பாக நடத்தினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்