திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர் தயாநிதி நினைவு வித்யாசாலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் துணிப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். காட்டன், சணல் போன்ற உறுதியான துணிகளால் ஆனப் பைகள் பலமுறை பயன்படுத்தக்கூடியவை, மக்கும் தன்மை கொண்டவை.
இவற்றைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கவும், நிலத்தையும் நீரையும் பாதுகாக்கவும் உதவும்.பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. துணிப் பைகள் மக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவை சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்க உதவுகின்றன. காட்டன் அல்லது சணல் போன்ற உறுதியான துணிகளில் இருந்து தயாரிக்கப்படும் துணிப் பைகளை பல முறை பயன்படுத்தலாம். இது பிளாஸ்டிக் பைகளை விட பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
துணிப் பைகளை பல முறை பயன்படுத்த முடியும் என்பதால், பணத்தை மிச்சப்படுத்துகிறது.துணிப் பைகள் பொதுவாக பிளாஸ்டிக் பைகளை விட உறுதியானவை மற்றும் பெரிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடியவை. இயற்கையான பொருட்கள்: சணல், பருத்தி போன்ற இயற்கையான பொருட்களில் இருந்து துணிப் பைகள் தயாரிக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பையை உபயோகியுங்கள். துணிப் பைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவை மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது நிலையான பொருட்களால் செய்யப்பட்டவையா என்பதைச் சரிபார்க்கவும். துணிப் பைகளை முறையாகப் பராமரித்து, நீண்ட காலம் பயன்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் பாலசுப்பிரமணி வரவேற்க பட்டதாரி தமிழ் ஆசிரியர் குணசேகர் நன்றி கூறினார். உடற்கல்வி ஆசிரியர் சம்பத்குமார் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.