திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் முழுமைக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இடுப்பில் கட்டும் துண்டை தோலில் போடு, உன்னை பண்ணையார் அடித்தால் திருப்பி அடி என்று கர்சித்த மாவீரர் தோழர் பி.எஸ். சீனிவாச ராவ் அவர்களின் 64- ஆம் ஆண்டு நினைவு தினம் நிகழ்வு ஒன்றியத்தில் அனைத்து கிளைகளில் நடைபெற்றது.
பைத்தஞ்சேரி கிளை துணை செயலாளர் வி.ராஜகுரு தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் முன்னிலையில் கட்சி கொடியினை வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ். எம்.செந்தில்குமார் ஏற்றி வைத்தார். பி.எஸ்.சீனிவாசராவ் அவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ஜி.ரவி புகழரை நிகழ்த்தினார், நிகழ்ச்சியில் பொருளாளர் செந்தில் மற்றும் கட்சி உறுப்பினர்கள், கிராம கமிட்டி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.