கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு பகுதியில் உள்ள முடீஸ் பஜார் பகுதியில் உள்ள சிதிலமடைந்த பேருந்து நிலையம், முட்புதர் மண்டி மூடிய கழிப்பறை, பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி ஆகியவற்றால் தொடர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி பொதுமக்கள் அவைகளை சீரமைக்க பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததாக குற்றம் சாட்டிவரும் அப்பகுதி பொதுமக்கள் தற்போது வால்பாறை நகராட்சியில் பொறுப்பு ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள குமரனிடம் முடீஸ் பஜார் பகுதியின் அவல நிலையை கூறி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த ஆணையாளர் குமரன் அப்பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு மேற்க் கொண்டு அரசு பணிகளை செய்வதே அதிகாரிகளின் கடமை என்று கூறியதோடு உரிய நடவடிக்கை விரைவில் எடுப்பதாக உறுதியளித்துள்ளார் இதனால் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்