திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமானது அனுமந்தராயன் கோட்டையில் 26.9.25 முதல் 2.10.25 வரை நடைபெற்று வருகிறது.
நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வாக நெகிழி ஒழிப்பு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பாக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த பேரணியை முன்னாள் மாணவர் அமைப்பின் ஆலோசகர் குழு உறுப்பினர்.ஜெயசீலன் வெளியுறவு செயலர். மரிய ராஜேந்திரன் பொருளாளர்.மைக்கில் ஆகியோர் முன்னிலையில் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பேரணியில் நெகிழி ஒழிப்பு சம்பந்தமாக பல்வேறு முழக்கங்களை எழுப்பி ஊர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஏற்படுத்தினர். இந்த பேரணியை நாட்டு நல பணித் திட்ட அலுவலர்.ஜேம்ஸ் ஒருங்கிணைத்தனர்.