அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது மனு கொடுக்கும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்களை எடுத்து பட்டியல் இன மக்களிடம் வழங்க வேண்டும் நில உச்சவரம்பு சட்டப்படி தனிநபர் கையில் இருக்கும் விளை நிலங்களை எடுத்து நிலம் இல்லாத விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் அரியலூர் மாவட்டத்தில் நத்தம் புறம்போக்கில் ஆண்டாண்டு காலமாக குடியிருப்பவர்களுக்கு நிபந்தனை இன்றி பட்டா வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் ஊர்வலம் வாலாஜா நகரத்திலிருந்து புறப்பட்டது சிஐடி யு மாவட்ட செயலாளர் தோழர்துரைசாமி துவக்கி வைத்தார்
அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு தவிச மாவட்ட செயலாளர் இர மணிவேல் அஇவிதொச மாவட்ட செயலாளர் அ கந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் எம் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார் மூத்த தோழர் சிற்றம்பலம் எல்ஐசி கிருஷ்ணன் உட்பட 600க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டனர் வருவாய்த்துறை அதிகாரிகள் 1600 மனுக்களை போராட்ட குழுவினரிடமிருந்து பெற்றுக் கொண்டனர் தோழர் சீனிவாச ராவ் நினைவு நாளில் இந்த மனு கொடுக்கும் போராட்டம் அரியலூரில் நடந்தது