தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மிக அருகில் புதியதோர் உதயமாக அமிசோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமிசோ பிராண்ட் நிர்வாகி ஹரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர்கள் கவிதா, கற்பகம் , ஆரோக்கிய சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அமிஷோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் நிர்வாகி இளமுருகன் வரவேற்றார். அலங்கார் லாட்ஜ் உரிமையாளர் தொழிலதிபர் மனக்காவலன் அமிசோ முகில் எழில் பேமிலி ஸ்டோரினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சாந்தி மருத்துவமனை மருத்துவர் கௌதமி தமிழரசன், தென்காசி நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் , ஜே பி கல்வியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் ஜான் கென்னடி மற்றும் சுரண்டை அன்னலட்சுமி நர்சிங் கல்லூரி நிர்வாகி வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்தியன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் மகேஷ், தென்காசி அருவி இன்ஸ்டியூட் சேர்மக்கனி, இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி நல்லாசிரியர் சுரேஷ்குமார் , நல்லாசிரியர் வின்சென்ட்,
மற்றும் பள்ளி நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் , பல்வேறு வணிக நிறுவன உரிமையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர். ஏற்பாடுகளை உரிமையாளர் எழில் நிலவன் செய்திருந்தார் . உரிமையாளர் முகிலரசன் நன்றி கூறினார்.