கோவை உக்கடம் பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் கிரீன் கார்டன் நண்பர்கள் குழுவினர் ஒருங்கிணைத்த இதில்,கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதில் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரஃபி உட்பட பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்..
இதில்,கோட்டைமேடு பகுதி செயலாளர் பதுருதீன் பல்சமய நல்லுறவு இயக்கம் நிர்வாகி அபுதாஹீர் இஸ்மாயில். டிஸ்கோ காஜா கிரீன் கார்டன் நண்பர்கள் குழு நிர்வாகிகள் அக்கீம் இப்ராஹிம் அசாருதீன் மைதீன் செட் முபாரக் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என . பொதுமக்கள் கலந்து கொண்டனர்…
இதில் பேசிய பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,கரூர் சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பொறுப்பாக தமிழக முதல்வர் பேசியுள்ளதாக தெரிவித்தார்..
அதே நேரத்தில் கரூர் பிரச்சார சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ள த.வெ.க.தலைவர் விஜய் பக்குவம் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளதாக சுட்டி காட்டிய அவர்,அரசியலில் நடிகர் விஜய் ஜீரோ என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்..