திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் இடைக்கற்காலம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி, தொல்லியல் முதுகலை பட்டதாரி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் இடைக்கற்காலம் குறித்து பேசுகையில், இடைக் கற்காலம் (Mesolithic) என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில், கற்காலத்தில், பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலமான கட்டத்தைக் குறிக்கிறது.

இக்காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும், இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், காடுகள் அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெரும்பாலான பகுதிகளில், நுண்கற்கருவிகள், இக்காலப் பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடரிகள் மற்றும் ஓடங்கள், வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன.
இடைக்கற்காலப் பண்பாடு, புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலப் பண்பாடு பழங்கற்காலத்திற்கும் இடைக் கற்காலம் என்று அறியப்படுகிறது.

மக்கள் பெரும்பாலும் மைக்ரோலித்திக் என்று சொல்லப்படும் சிறு நுண் கற்கருவிகளைப் பயன்படுத்தினர், பனிக்காலத்திற்குப் பிறகு புவி வெப்பமடைந்ததைத் தொடர்ந்து, வேட்டையாடுவோராகவும் உணவு சேகரிப்போராகவும் இருந்த மக்கள் பல்வேறு சூழலியல் பகுதிகளுக்கும் கடற்கரை, மலைப் பகுதி, ஆற்றுப்படுகை, வறண்ட நிலம் என பரவ ஆரம்பித்தனர்.

இடைக்கற்கால மக்கள் நுண்கற்கருவித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். சுமார் 5 செமீ அளவிற்கும் குறைவான அளவுள்ள சிறு சிறு செய்பொருள்களை உருவாக்கினர். இவர்கள் கூர்முனைகள், சுரண்டும் கருவி, அம்பு முனைகள் ஆகியவற்றைச் செய்தனர். இவர்கள் பிறை வடிவ (Lunate) முக்கோணம் சரிவகம் (Trapeze) பயன்படுத்தினர். இந்தக் கருவிகள் மரத்தாலும் எலும்பாலுமான பிடிகள் அமைத்துப் மைக்ரோலித் நுண்கற்கருவிகள் மிகச் சிறிய கற்களில் உருவாக்கப்பட்ட செய்பொருட்கள் ஆகும். புதிய கற்காலப் பண்பாடும் வேளாண்மையின் தொடக்கமும் வேளாண்மை, விலங்குகளைப் பழக்குதல் ஆகியவை புதிய கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாகும்.

வளமான பிறை நிலப்பகுதி என்று அழைக்கப்படும் எகிப்து மற்றும் மெஸ்படோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி, சீனாவின் செழுமையான பகுதிகள் ஆகியனவற்றில் புதிய கற்காலத்துக்கான தொடக்க காலச் சான்றுகள் காணப்படுகின்றன. சுமார் கி.மு. (பொ.ஆ.மு.) 10,000லிருந்து கி.மு. (பொ.ஆ.மு.) 5,000ற்குள் இப்பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. . பகுதி பிறை நிலவின் கற்கருவிகள் செய்வதற்கு வழவழப்பாக்கும், மெருகூட்டும் புதிய நுட்பங்கள்பயன்படுத்தப்பட்டதால் இது புதியகற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

புதிய கற்கால மக்கள், பழங்கற்காலச் இடைக்கற்காலம் வரையிலும் மக்கள் தாம் நிலைத்திருப்பதற்காக வேட்டையாடுவதையும் செதுக்கப்பட்ட கற்கருவிளையும் பயன்படுத்தினர். உணவு சேகரிப்பதையும்தான் நம்பியிருந்தார்கள். குறைந்த அளவு உணவுதான் கிடைத்தது. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்கள்தான் வாழ முடிந்தது. வேட்டையிலும் உணவு சேகரிப்பிலும் பயிர் விளைவித்தலும், விலங்குகளைப் பழக்கப்படுத்துதலும் அறிமுகமானது.

இது ஏராளமான அளவில்தானியமற்றும் விலங்கு உணவை உற்பத்தி செய்வதற்கு இட்டுச் சென்றது. ஆறுகள் படிய வைத்த வளமான வண்டல் மண் வேளாண்மை அதிகரிக்க உதவியது. இது, சிறந்த இயற்கைத் தகவமைப்பாக இருந்ததால், மக்கள் நதிக்கரைகளில் வாழ்வதை விரும்பினர்.

இப்புதிய செயல்பாடுகள் உணவு உபரிக்கு இட்டுச் சென்றது. இந்த உணவு உபரிதான் பண்டைய நாகரிகங்களின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கியமான கூறு ஆகும். இக்காலத்தில் நிரந்தரமான வீடுகள் கட்டப்பட்டன. பெரிய ஊர்கள் உருவாகின. எனவே, இவை புதிய கற்காலப் புரட்சி என்றழைக்கப்படுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *