திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர் தயாநிதி நினைவு வித்யாசாலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் முன்னிலையில் , நாணயங்கள், தபால் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி மகாத்மா காந்தி நினைவார்த்த அஞ்சல் தலை நாணயங்களை காட்சிப்படுத்தி, மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு, அகிம்சை வழிகளை எடுத்துரைக்கும் வகையில் பொது பயன்பாடு, நினைவார்த்த அஞ்சல் தலை, மினியேச்சர், செட் அ நெட், அஞ்சல் அட்டை உட்பட இந்திய அஞ்சல் துறை மற்றும் உலக நாடுகள் அஞ்சல் துறையினர் வெளியிட்ட அஞ்சல் தலைகள், முதல் நாள் உறைகள், சிறப்பு உறைகள் மற்றும் நினைவார்த்த நாணயங்களை கொண்டு அகிம்சை, சத்தியாகிரகம், தீண்டாமை ஒழிப்பு, மற்றும் சர்வோதயக் கல்வி உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார்.
முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் பாலசுப்பிரமணி வரவேற்க பட்டதாரி தமிழ் ஆசிரியர் குணசேகர் நன்றி கூறினார். உடற்கல்வி ஆசிரியர் சம்பத்குமார் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.