போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் நவராத்திரி விழா கொண்டாட்டம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி மகளிர் மையம் சார்பாக கடந்த 22.9.2025. முதல் 2.10.2025 வரை ஆன்மீகமும் கலாச்சாரமும் நிறைந்த முறையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் கெளரவ தலைவர் எஸ்
வி.சுப்பிரமணியன் கல்லூரியின் தலைவர் எஸ். ராமநாதன் உப தலைவர் எஸ் வி எஸ் ஞானவேல் கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நவராத்திரி விழா கொண்டாட்டப் பட்டது
இந்த விழா கல்லூரியின் மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ் விஜயலட் சுமி மகளிர் மைய உறுப்பினர்கள் முனைவர் டி.ஹேமா முனைவர் ஆர். ரோகினி முனைவர் எம். அன்புச்செல்வி முனைவர் எம். சரண்யா தேவி பேராசிரியர் ஆர்.சுஜிதா ஆகியோருடன் 11 நாட்கள் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் பல்வேறு துறைகளின் பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொலு அலங்காரம் மற்றும் பூஜைகளை சிறப்பாக நடத்தினார்கள்
இந்த நவராத்திரி விழா கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பாரம்பரியம் மற்றும் ஆன்மீக அறிவை வழங்குவது மட்டுமல்லாமல் மாணவர்களின் ஒத்துழைப்பு பொறுப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு சிந்தனைகளை மேம்படுத்துவற்கு உதவியாக இருந்ததாக பெருமிதம் கொண்டனர். இந்த நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியில் மகளிர் மையத்தின் உறுப்பினர்கள் மிக சிறப்பான முறையில் செய்திருந்தனர்