வலங்கைமான் லாயம் பகுதியில் ஜந்து ஆலயங்களின் சுவாமிகள் சங்கமித்து அம்பு போடும் இடத்தில் பேரூராட்சி சார்பில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன், செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன், ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ கோதண்டராமசாமி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் ஆகிய ஜந்து ஆலயங்களில் இருந்து நவராத்திரி திருவிழாவின் விஜயதசமி அன்று வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உள்ள லாயம் பகுதியில் வருடந்தோறும் ஜந்து சுவாமிகள் சங்கமித்து அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு இன்று ( அக்டோபர் 02-ந்தேதி வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு வலங்கைமான் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சி.சரவணன் உத்திரவின் பேரில், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன், 1- வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் செல்வமணி ஆகியோர் வழிக்காட்டலின் படி பேரூராட்சி மன்ற சுகாதார ஆய்வாளர் தனசேகர், சுகாதார மேற்பார்வையாளர் ஆர்.அம்பேத்கர் குமார் ஆகியோர் மேற்பார்வையில் பேரூராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள் அந்த பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர்.