கமுதி அருகே சூரம்மாள் கோவில் பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே. வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சூரம்மாள் கோவில் வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன.
கே.வேப்பங்குளம் கிராமத்தில் இருந்து கமுதி சாலையில் 8 கிலோமீட்டர் எல்கை தூரம் நிர்ணயம் செய்யப்பட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி விருதுநகர் சிவகங்கை மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 33 மாட்டு வண்டிகளுடன் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதில் முதல் நான்கு இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம், குத்துவிளக்கு பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொது
மக்கள் கண்டு ரசித்து சென்றனர்