அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள்,மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினம் மற்றும் ஜனநாயகம் காப்பதற்காக பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக கூறி மாபெரும் கையெழுத்து இயக்கம் காங்கிரஸ் கட்சியில் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், தலைமையில் நடந்தது. முன்னதாக வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நூர்முகமது, அமைப்புசாரா தொழிலாளர் மாநிலத் தலைவர் மகேஸ்வரன்,மதுரை புறநகர் மாவட்ட தலைவர் அமைப்புசாரா தொழிலாளர் தலைவர் சோனைமுத்து, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிவண்ணன், வட்டார தலைவர்கள் சண்முகசுந்தரம், சிவராமன், மகாதேவன், முருகானந்தம் மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, அமைப்புசாரா மாநில துணைச் செயலாளர் ஜெயராமன், ஒன்றிய துணைத் தலைவர் திரவியம்,ஒன்றிய செயலாளர் மலைராஜன்,அமைப்புசாரா வட்டார தலைவர் முத்து, மற்றும் நிர்வாகிகள் தர்மராஜா,வட்டாரத் துனைச் செயலாளர் முருகன், கொண்டையம்பட்டி கிராம கமிட்டி தலைவர் முருகன், எஸ் டி எஸ் சி பிரிவு ஒன்றிய தலைவர் பாலமுருகன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கௌதம் பலா, மலைச்சாமி, செயது , ராமச்சந்திரன்,பிச்சை கியாஸ் சேகர், பாஸ்கர், சேதுபதி, இனைச் செயலாளர் கண்ணுச்சாமி, வட்டாரப் பிரதிநிதி முத்தன்.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.