கரூரில் நடைபெற்ற உயிரிழப்பிற்கு கூட்ட நெரிசலே காரணம் என்பது தெளிவாக தெரிகிறது இதில் தனிநபரையோ அரசையோ குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல அதிகப்படியான மக்களை கூட்டுகின்ற சக்தியை விஜய் பெற்றுள்ளார் கூட்டத்தை வழி நடத்துவதற்கான தொண்டர் அணி இளைஞரணி அவர் உருவாக்கிக் கொள்ள வேண்டும் சீர்காழியில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஓட்டு திருட்டிற்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் அறிக்கை வந்த பின்பே காங்கிரஸ் கட்சி அது குறித்து கருத்துக்களை தெரிவிக்கும்

கரூரில் நடைபெற்ற சம்பவம் குறித்து வீடியோவை முழுமையாக ஆராய்ந்து பார்த்ததில் இச்சம்பவம் கூட்ட நெரிசலால் ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதே தவிர தனிநபர் தூண்டி விட்டதால் இச்சம்பவம் நடைபெற்றதாக தெரியவில்லை. செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டுகிறார்கள் ஆனால் அந்த கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது ஒருவர் மீது ஒருவர் கூட்ட நெரிசலால் விழுந்து இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. எனவே ஒரு தனி நபர் மீது அல்லது அரசின் மீதோ குற்றம் சாட்டுவது சரியான நிலைப்பாடு இல்லை.

தமிழக முதலமைச்சர் நிதானம் தவற மாட்டார் அவசரப்பட மாட்டார் தான் சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை அழுத்தமாக செய்யக் கூடியவர்
விஜய் கைது செய்யப்படவில்லையே என்ற திருமாவளவனின் கருத்து குறித்த கேள்விக்கு தெலுங்கானாவில் நடிகர் அல்லு அர்ஜுனா திரையரங்கிற்கு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்டது அப்போதே அங்குள்ள அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது விடுதலை ஆனார். எனவே அது போல் இங்கும் நடக்க வேண்டும் என நான் கூறவில்லை அது சரியானதாகவும் இருக்காது என்பது என் கருத்து

இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான விஷயங்களில் நன்கு அலசி ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும் அதனால் தான் முதலமைச்சர் எந்த கருத்தையும் சொல்லாமல் இருக்கிறார்.

அதிகப்படியான கூட்டம் ஆர்வமான கூட்டம் கூட்ட நெரிசலால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து தான் உயிரிழந்தார்கள் தவிர யாரும் திட்டமிட்டு இதனை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது

இந்தக் கூட்டத்தை நடத்தியவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் மக்கள் ஆதரவு இருக்கிறது ஆனால் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்துவதற்கான அனுபவம் அவர்களுக்கு இதுவரை வரவில்லை

அவ்வளவு நெருக்கடியான கூட்டத்தில் விஜய் கூட மேலிருந்து தண்ணீர் பாட்டிலை வீசியிருக்கிறார் அதனை பிடிப்பதற்காக சிலர் முண்டியடிக்கின்றனர் சின்ன கூட்டங்களிலே தண்ணீர் பாட்டிலை வீசினால் கூட அதனை எடுப்பதற்காக முடி எடுக்கும்போது நெரிசல் ஏற்படும் அது சிரமமான காரியம்

எனவே யார் மீதும் அவசரப்பட்டு குற்றம் சொல்ல வேண்டாம் இதனை அரசியல் ஆக்க வேண்டாம். ஆர்வம் மிக்க மக்கள் ஆர்வத்துடன் கூடிய கூட்டம் ஒருவர் மீது இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது

எனவே இதில் காவல்துறை தவறு செய்தார்களா? வருவாய் துறை தவறு செய்தார்களா? கூட்டத்தை நடத்தியவர்கள் தவறு செய்தார்களா என்பதை நீதிமன்றம் தான் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர முடியுமே தவிர மற்றவர்கள் கூற முடியாது ஒரு நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம் என்றால் அதற்கான பாதுகாப்பை நாம் தான் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று கூற முடியாது

இவ்வளவு மக்களை கூட்டுகிற சக்தியை விஜய் பெற்றிருக்கிறார் எனவே அவர் இதனை முறைப்படுத்துகிற வலுவான தொண்டர் அணியையும் இளைஞர் அணியையும் உருவாக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற கூட்டங்களை நடத்த வேண்டும் என்றால் அவரிடம் வலிமையான இளைஞர் அணி ஒன்று வேண்டும் அனைத்தையுமே காவல்துறை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது

முதல்வர் வரும்போது அவ்வளவு காவலர்கள் வருகிறார்கள் இங்கு ஏன் வரவில்லை என்று கூறுகிறார்கள் ஒரு காவல் அதிகாரி எங்கே செல்ல வேண்டுமோ அங்கே தான் அவர் செல்ல முடியும் அதற்கான வரைமுறைகள் உள்ளது உதாரணமாக நாட்டின் பிரதமருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படாது.

முதல்வருக்கு உண்டான பாதுகாப்பு வேறு ஆளுநருக்கு உண்டான பாதுகாப்பு வேறு முதல்வரும் ஆளுநரும் சென்றால் கூட ஆளுநருக்கு தான் முதல் வரவேற்பு கிடைக்கும் முதல்வர் இரண்டாம் வானவர் அது போல் தான் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு கிடைக்கும் பாதுகாப்பை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்குவது இயலாது.

எனவே ஒரு சம்பவம் நடைபெற்று விட்டது இனிமேல் நடைபெறும் கூட்டங்களுக்கு கூட்டத்தை நடத்துபவர்கள் தங்களுக்கு தங்களது தொண்டரணியை பாதுகாப்பிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா கட்சியிலும் அது உள்ளது விரைவில் விஜயும் அதை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இதனை அரசியல் ஆக்க வேண்டாம் இதனை மனிதாபிமானத்துடன் பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம் அவசரப்பட்டு ஒரு குற்றம் குறை சொல்ல வேண்டாம் என்பது என்னுடைய கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *