தர்மபுரி மாவட்டம்
கடத்தூரில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தால் கடத்தூர் தனி வட்டமாக அறிவிப்பு வெளியீடு ஆஇஅதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்துக்கு உட்பட்ட கடத்தூரில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியது.
அண்மையில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 41 உயிர் இழப்புக்கு பாதுகாப்பு குறைபாடு முக்கிய காரணம் என்று திமுக அரசை குற்றம் சாட்டினார் மேலும் தங்கள் அரசு எந்த கட்சியினர் கூட்டம் நடத்தினாலும் உரிய பாதுகாப்பு அளித்து வந்தோம் என்று கூறினார்
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்த்தது என்ன என்று தகவல்களை கேட்டால் வெற்று பேப்பரை மட்டும்தான் காட்டுகிறார் என்று பேசினார்.