காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ தாய் படவேட்டம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்ற வருவது வழக்கம் அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கிய நவராத்திரி உற்சவம் காலை மாலை இருவேளைகளிலும் பல்வேறு அலங்காரத்தில் தாய் படவேட்டம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதனை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நவராத்திரி நிறைவு நாளான இன்று ஸ்ரீ தாய் படவேட்டம்மன் அம்மனுக்கு பல்வேறு நகரின் முக்கிய நகர வீதி வழியாக 108 பால்குடம் மற்றும் கோவிலில் 108 சங்காபிஷேகம் மற்றும் கலசபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் 20அடி நீளம் கொண்ட வேல் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றி வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாவி தரிசனம் செய்து வருகின்றனர்.