திருவொற்றியூர்,
மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு தோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழா இன்று காலை கொடி தொடங்கி பந்தையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும், கொடி மரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர்.
பின்னர் பதிவலம் வந்து காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப் பட்டது. இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் தினமும் மாலை திரு ஏடு வாசிப்பு நடைபெறுகிறது. தினமும் இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார்.
விழாவின் 8-வது நாளான 11-ந் தேதி இரவு 8 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 8.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார்.
தேரோட்டத்தை முக்கிய , பிரமுகர்கள் முகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ.சுவாமி நாதன், பொருளாளர், பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி.ஐவென்ஸ், சிவராஜ், வைகுண்டராஜன், ஜெயகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.