உரிமைக்கோரப்படாத உடல் காவலர் உடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா கீழ நாகமங்கலம் நாடக மேடையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மணிகண்டம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கையில், மேற்கண்ட இடத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தலையின் இடது பக்கத்தில் பலத்த ரத்த காயம் பட்டு ரத்தம் சிதறி இறந்து கிடந்தார்.
அவர் தலை அருகில் பெரிய கல் ஒன்று கிடந்தது. சிவப்பு ஊதா கருப்பு கலர் கட்டம் போட்ட கைலியும் இளம் பச்சைக் கலர் அரைக்கை டி-ஷர்ட் மற்றும் வெள்ளை பிரவுன் கலர் கட்டம் போட்ட துண்டு அணிந்திருந்தார்.மேற்படி நபர் விராலிமலை தாலுகா கலிமங்கலம் புதுநகரை சேர்ந்த சின்னதுரை என தெரிய வந்தது அவரது அப்பா பெயர் தெரியவில்லை. சம்பவம் குறித்து மணிகண்ட காவல்துறை காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள் இறந்த நபர் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், உடலினை யாரும் உரிமை கோரவில்லை.
உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக மணிகண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனியப்பன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் மணிகண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனியப்பன், இரண்டாம் நிலை காவலர் ஆரோக்கிய கிங்ஸ்லி முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.