திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் 11-ஆம் நாள் 03- ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் காட்சி அளித்தார். இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது,
இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. 11-ம்நாள் மண்டகப்படி உபயதாரர்கள் வலங்கைமான் இரெ.பன்னீர்செல்வம் உடையார், இரெ.இராஜப்பா உடையார், இரெ.பாண்டியன் உடையார், இரெ.காமராஜ் உடையார் குடும்பத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்வில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நேற்றுடன் நவராத்திரி திருவிழா இனிதே நிறைவுற்றது.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்/ தக்கார் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.