இராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குளம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயங்கள்வைகை தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதுசுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, சாயல்குடி அருகே மேல செல்வனூர், ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய், நயினார் கோவில் செல்லும் சாலையில் தேர்த்தங்கல் ஆகிய 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் காஞ்சிரங்குளம், சித்தரங்குடி ஆகிய 2 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு நவம்பர் மாதம் முதல் ஏராளமான பறவைகள் வரத் தொடங்கும். இவ்வாறு வரும் பறவைகள் மீண்டும் ஏப்ரல் மாதம் திரும்பிச் செல்லும். இந்த சரணாலயங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருவதால் கடந்த மாதத்திற்கு முன்பே அனைத்து பறவைகளும் திரும்பி சென்று விட்டன. இதனால் வழக்கம் போல் நவம்பர் மாதம் பறவைகள் இந்த சரணாலயங்களுக்கு வர வய்ப்பு குறைந்துள்ளது.
வைகை தண்ணீர் இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.