தூத்துக்குடி
நவராத்திரி தசரா பெருந்திருவிழாவின் நிறைவாக தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து அம்பாள்களின் அருட்சப்பரப் பேரணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு நேற்று 5.10.2025 மாலை நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி நடத்திய இந்நிகழ்வில் பாஜக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், அதிமுக மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, பாஜக விவேகம் ரமேஷ், அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்பெருமாள், மாணவரணி மாவட்ட செயலாளர் பில்லா விக்னேஷ், பகுதி கழகச் செயலாளர்கள் ஜெய்கணேஷ், சேவியர், தெற்கு பகுதி பொறுப்பாளர் சுடலைமணி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூ மணி, சரவண பெருமாள், முனியசாமி, முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன், ராஜ்குமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, சாந்தி, இந்திரா, ராஜேஸ்வரி, தமிழரசி, ஷாலினி, ஸ்மைலா, அன்ன பாக்கியம், நிர்வாகிகள் தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், பொற்கிழி ஜான்சன் தேவராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், நவ்சாத், சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, ஐடி விங் சொக்கலிங்கம், கொம்பையா, ரெங்கன், சந்தன்ராஜ், பாலாஜெயம் சாம்ராஜ் சகாயராஜா யுவன் பாலா சிதம்பர ராஜா ஆனந்த், மைதின் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
முன்னதாக தூத்துக்குடி கீழூர் சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து 1008 மாவிளக்கு ஊர்வலமும், சிவன் பார்வதி அம்மன் உள்ளிட்ட வேடங்கள் , கரகாட்டம் ஒயிலாட்டம் சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பாரத மாதா பேரணியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகரின் முக்கிய திருக்கோவில்களின் அம்பாள்களின் அருட்சப்பரங்கள் எழுந்தருளி எதிர்சேவைக்காக சிவன் கோவில் நோக்கி வருகை தந்தன.
விழா ஏற்பாட்டளர்கள் மாயக்கூத்தன் தனபாலன் ஆதிநாத ஆழ்வார் சிவக்குமார் வன்னியராஜ் ராகவேந்திரா சரவணகுமார் வேல்சாமி குருமூர்த்தி காளிராஜா சிவலிங்கம் பலவேசம் வினோத் மாரியப்பன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டு நிர்வாகிகளும் இருந்தனர்