திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பதிவு தபால் சேவை நினைவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார்.

நிறுவனர் நாசர், பொருளாளர் தாமோதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் காசிநாத் பதிவு தபால் சேவை நிறைவு குறித்து பேசுகையில்,தபால் தலை சேகரிப்பு என்பது அஞ்சல் தலைகளையும், அதனுடன் தொடர்புடைய தபால் குறிகள், முத்திரையிடப்பட்ட உறைகள் போன்ற பொருட்களையும் சேகரிக்கும் ஒரு பொழுதுபோக்காகும்.

இது உலகின் மிகவும் பிரபலமான பொழுது போக்குகளில் ஒன்றாகும். இது ஒரு நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் அடையாளம் பற்றிய தகவல்களைத் தரும் ஒரு சிறந்த வழியாகும். அவ்வகையில் பதிவு தபால் நிறுத்தமும் ஒரு வரலாறு பதிவாகிவிட்டது.இந்​திய அஞ்​சல்​துறை​யில் பதிவு தபால் சேவை நிறைவு பெற்று 2025 அக்​.1-ம் தேதி முதல் விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட்டது. இதற்காக கர்நாடகா அஞ்சல் வட்டம் சார்பில் நினைவர்த்த பதிவுத்தபால் உரையை வெளியிட்டு உள்ளது.இந்​திய அஞ்​சல் துறை சேவையானது 1766-ம் ஆண்டு கிழக்கு இந்​திய கம்​பெனி ஆட்​சி​யில் வாரன் ஹேஸ்​டிங்ஸ் என்​பவ​ரால் கம்​பெனி மெயில் தொடங்​கப்​பட்​டது.

1854-ம் ஆண்டு டல்​ஹவுசி பிரபு​வால் சீரமைக்​கப்​பட்​டு, அஞ்​சல் கட்​ட​ணம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதுவே அதி​காரப்​பூர்வ இந்​திய அஞ்​சல் துறை தொடங்​கப்​பட்ட ஆண்​டாக கரு​தப்​படு​கிறது. இந்​திய அஞ்​சல் துறை​யில் தற்போது1.59 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அஞ்​சல் நிலை​யங்கள் கட்டமைப்புடன் உலகின் மிகப்​பெரிய அஞ்​சல்​துறை​யாக இந்​திய அஞ்​சல்​துறை செயல்​படு​கிறது. இந்​திய அஞ்​சல் துறை மூல​மாக பல்​வேறு சேவை​கள் மக்​களுக்கு வழங்​கப்​படும் நிலை​யில், இவற்​றில் பதிவு தபால் சேவை முக்​கிய​மான​தாக இருக்​கிறது. பதிவு தபால் சேவை 1854-ல் இந்​திய அஞ்​சல் துறை​யால் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. நீதி​மன்​றம், வங்​கி, அரசு துறை சார்ந்த கடிதங்​கள் உள்​ளிட்​டவை பதிவு தபால்​கள் மூலம் அனுப்​பப்​படு​கின்​றன.

முக்​கிய ஆவணங்​கள், சான்​றுகளை அனுப்​பும் போது, வாடிக்​கை​யாளர்​களின் முதல் தேர்​வாக பதிவு தபால்​கள் இருக்​கின்​றன. அதாவது, பதிவு தபால் யாருக்கு அனுப்​பப்​படு​கிறதோ அவரே பெற முடி​யும் என்​பது இதன் தனிச்​சிறப்​பாகும். பாது​காப்​பான ஆவண விநி​யோகத்​துக்கு பதிவு செய்​யப்​பட்ட அஞ்​சல் நம்​பக​மான சேவை​யாக இருந்தது.

அஞ்​சல் செயல்​பாடு​களை நவீனமய​மாக்​கும் நோக்​கில், 171 ஆண்டு கால சேவை​யாக திகழும் பதிவு தபால் சேவை அக்.1-ம் தேதி முதல் சேவை நிறுத்தப்பட்டு, விரைவு தபால் சேவை​யுடன் இணைக்​கப்பட்டது.அதாவது, டிஜிட்​டல் விருப்​பங்​களால், பதிவு செய்​யப்​பட்ட தபால் பயன்​பாடு குறைந்​து, மேம்​பட்ட கண்​காணிப்​பு, வேக​மான விநி​யோக நேரம் மற்​றும் சிறந்த செயல்​பாட்​டுத் திறன் கொண்ட விரைவு தபால் சேவை​யுடன் இணைக்​கப்பட்டது என்றார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன்,சிவக்குமார், இளம்வழுதி, அருள்மொழி தேவன், முத்துராம் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *