செய்தியாளர் அஷ்ரப்தீன்
புதுச்சேரியில் தி.மு.க., சார்பில், ‘உடன்பிறப்பே வா’ பரப்புரையின் கீழ், முத்தியால்பேட்டை தொகுதியில் உறுப்பினர் சேர்க்கையை ஜெகத்ரட்சகன் எம்.பி., துவக்கி வைத்தார்
புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில், ‘உடன்பிறப்பே வா’ பரப்புரையின் கீழ் உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா தொடங்கியது. ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தலைமையில் அண்ணா சிலை மற்றும் கலைஞர் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, முத்தியால்பேட்டை தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் முன்னிலையில் வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியை ஜெகத்ரட்சகன் எம்பி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநில அவைத்தலைவர் சிவக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் சம்பத் முன்னிலை வகித்தனர்.உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.