கம்பம் நகரில் பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து விலகி நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் கட்சியில் இணையும் மாபெரும் இணைப்பு விழா தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற மாபெரும் விழாவில் பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து விலகி நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் மனித நேயர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் கட்சியில் இணையும் விழா கம்பம் ஜெஎஸ்டி மஹாலில் நடைபெற்றது
முன்னதாக கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கொட்டும் மழையில் 2.கீலோமீட்டர் தூரம் மேள தாளங்கள் முழங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஊர்வலமாக பிரதான வீதிகளில் நடந்து வந்தனர்
வரும் வழியில் நகரின் இதயப் பகுதியில் உள்ள கம்பம் காந்தி சிலைக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து ஜெஎஸ்டி மகாலில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் பல்வேறு மாற்று கட்சியிலிருந்து விலகி நமது மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது
இந்த விழாவிற்கு கட்சியின் மாநில பொறுப்பாளர் கூடல் செல்வேந்திரன் தலைமை வகித்தார் கட்சியின் மாநில பொறுப்பாளர் இ எம் எஸ் .அபுதாகீர் அனைவரையும் வரவேற்று பேசினார் மாற்று கட்சியிலிருந்து வந்த சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் இதை யடுத்து கட்சியின் நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா மாற்றுக் கட்சியில் இருந்து இணைந்தவர்களை வரவேற்று சிறப்புரை ஆற்றினார்.