கம்பம் நேதாஜி ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்களுடன் உணவு அருந்தி பிறந்த நாள் கொண்டாடிய தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல்பட்டு வரும் நேதாஜி ஆதரவற்ற குழந்தைகள் முதியோர்கள் இல்லத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தனது பிறந்த நாளையொட்டி அங்குள்ள அனைவருக்கும் அறுசுவை உணவு தங்களது சொந்த பணத்தில் ஏற்பாடு செய்து அந்த காப்பகத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் தொழிலதிபர் டாக்டர் எம் வேல் பாண்டியன் மதிமுக மாவட்ட செயலாளர் வி எஸ் கே ராமகிருஷ்ணன் நேதாஜி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் காப்பக நிறுவனத் தலைவர் சோ. பஞ்சு ராஜா மற்றும் நகர பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்