ராகுல் காந்தியை பார்த்து இளைஞர்கள் இளைஞர் காங்கிரஸுக்குள் வருகிறார்கள் இந்திய இளைஞர் காங்கிரஸின் வெளி தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா ஜெரால்ட் பேட்டி
இந்திய இளைஞர் காங்கிரஸின் வெளி தொடர்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோஷ்வா ஜெரால்ட் டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்
சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ்வா ஜெரால்ட் கூறியதாவது
இந்திய இளைஞர் காங்கிரஸின் வெளித்தொடர்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எண்ணெய் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்த அவர் இந்த அமைப்பின் கீழ் விளையாட்டுத்துறை கலைத்துறை மகளிர் சுய உதவி குழு திறன் மேம்பாடு பயிற்சி ஆகிய அனைத்தையும் மக்களிடம் கொண்டு செல்வது தான் எங்களது நோக்கம் என்று தெரிவித்தார்.
2029 பாராளுமன்ற தேர்தலுக்குள் தேசிய அளவில் இரண்டு கோடி இளைஞர்களை இளைஞர் காங்கிரஸில் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சியும் கூட்டணி கட்சியும் ஜெயிப்பதற்காக பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.
எந்தக் கட்சிக்கும் யார் வேண்டுமானாலும் போய் சேரலாம் எங்கள் கட்சி கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம் என்றும் இந்த கொள்கைகள் மூலம் யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களை எல்லாம் இளைஞர் காங்கிரஸில் சேர்க்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்
மாநில அளவில் 70% சதவீதம் 40 வயதுக்கு கீழ் இருக்கிறார்கள் அவர்களை இளைஞர் காங்கிரசுக்குள் கொண்டு வருவது தான் எங்கள் கடமை என்றார் மக்கள் பிரச்சினை இலங்கை பிரச்சனையை அனைத்தையும் எடுத்து சரி செய்வோம் என்று தெரிவித்தார்
ராகுல் காந்தியை பார்த்து இளைஞர்கள் இளைஞர் காங்கிரஸுக்குள் வருகிறார்கள் என்று தெரிவித்தார்
திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொகுதி வாரியாக நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார் பின்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.