திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்குத் திருட்டு குறித்து, இளைஞர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது, நிகழ்விற்கு வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார்,
இளைஞர் காங்கிரஸ் நகரத் துணை தலைவி பிரியதர்ஷினி, காங்கிரஸ் தொழிற்சங்க நகர தலைவர் அகமது மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஜித் குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ராஜா சுடலைக்கனி ஆகியோர் முதல் கையெழுத்திட்டனர்,
அதனைத் தொடர்ந்து வாக்குத் திருட்டை பற்றியும், போலி வாக்காளர்களை சேர்த்து, உண்மையான வாக்காளர்களை நீக்கியும், 70 வயதுக்கு மேற்பட்ட வாக்காளரை முதல் வாக்காளர்களாக சேர்த்ததையும், ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை சேர்த்தும், ஜனநாயகத்தை சீர்கேடாக்கிய பிஜேபி அரசைக் கண்டித்தும், அதற்கு துணை போன தேர்தல் கமிஷனையும் கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தி, வாக்கு திருட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்வில் குடந்தை கவிஞர் ஐயப்பன், காங்கிரஸ் மூத்த முன்னோடி மருதமுத்து, இளைஞர் காங்கிரஸ் சஞ்சய், திருத்துறைப்பூண்டி வட்டாரத் தலைவர் பேரழகன், சட்டமன்ற தொகுதி தலைவர் ரோஜர் மற்றும் இளைஞர் காங்கிரஸ், இளைஞர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.