தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
தாராபுரம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைந் துள்ளது. இந்த அலுவலகத்தில் தாராபுரம் நகராட்சி மற்றும் தாராபுரம், குண்டடம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் புதிய பத்திரங்களை பதிவு செய்யவும், வில்லங்கச் சான்று உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
தாராபுரம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக கூட்டம் காணப்படுவதால் மாலை 5 மணி அல்லது மாலை 6 மணி வரை பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.
பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்து விடுவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
மேலும் ஒருசில நேரங்களில் பத்திரப்பதிவு செய்யாமல் திரும்பிச்செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே தாரா புரம் சார்பதிவாளர் அலுவலகத்தை இரண்டாக பிரித்து குண்டடம் பகுதியில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.