எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்.
பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் குணசேகரனுக்கு விருது வழங்கப்பட்டது.
பெரம்பலூர்.அக்.09. தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துநராக பணி புரியும் சத்திரமனையை சார்ந்த குணசேகரனுக்கு (17074) மூன்று முறை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் பணிமனையில் இருந்து ஆத்தூர் மதுரை வழித்தடத்தில் இயங்கும் (TN45 N4681) பேருந்தில் நடத்துனராக பணியாற்றும் சத்திரமனையை சார்ந்த குணசேகரனுக்கு டிஜிட்டல் பேமென்ட் மூலம் அதிக வசூல் காட்டியதற்காக சென்ற மாதம் 5ம் தேதி கும்பகோணம் லிட் மேலாண் இயக்குனர் தசரதன் மூலமாக விருது வழங்கி பாராட்டினார்கள். அதேபோல் இந்த மாதம் மீண்டும் டிஜிட்டல் பேமென்ட் மூலம் அதிக வசூல் செய்ததற்காக இந்த மாதம் 3ம் தேதி திருச்சி கமர்சியல் அதிகாரி சுரேஷ் மூலம் ஒரு விருதும், இந்த மாதம் 6ம் தேதி டிஜிட்டல் பேமென்ட் மூலம் அதிகம் வசூலித்ததாக கும்பகோணம் லிட் மேலாண்மை இயக்குனர் தசரதன் மூலம் மூன்றாவது முறையாக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற சத்திரமனையைச் சேர்ந்த குணசேகரனை போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த சக ஊழியர்கள் பாராட்டினார்கள்..