திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு தேசிய தன்னார்வ ரத்ததான தினம்..
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சார்பில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள எப் எம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியா தலைமை வகித்தார்.
அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முனைவர் மருத்துவர் அசோகன் துணை முதல்வர் மருத்துவர் விஜயலட்சுமி கண்காணிப்பாளர் மருத்துவர் கண்ணன் நிலைய மருத்துவ அதிகாரி ராமச்சந்திரன் உள்ளிட்ட முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் தேசிய தன்னார்வ ரத்ததான தினம் குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்வின்போது இணை இயக்குனர் மருத்துவர் திலகம் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் சங்கீதா துணை இயக்குனர் காசநோய் மருத்துவர் புகழ் உள்பட மருத்துவர்கள் செவிலியர்கள் தேசிய தன்னார்வ அமைப்பைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் முன்னதாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த மைய மருத்துவ அலுவலர் மருத்துவர் ரவிவர்மன் வரவேற்றார் இறுதியாக திருவாரூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மாவட்ட மேற்பார்வையாளர் ராமஜெயம் நன்றி கூறினார்.