பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே பாசன வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கூனஞ்சேரி ,தியாகசமுத்திரம், உமையாள்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு விவசாய நிலங்களில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,அப்பகுதியில் பழவாறு என்கிற ஓட்டை பாசன வடிகால் வாய்க்கால் பொதுப்பணித்துறையினரால் தூர்வாரப்படாமல் மழைநீர் முழுவதும் பாசன வயல்களுக்கு சென்று தேங்கி உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் வயல்களில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் மின்மோட்டார் வைத்து நீரை வெளியேற்று வருகின்ற சூழ்நிலை ஏற்படுவதாகவும்,பலமுறை விவசாயிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிடையே கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் பாசன வடிகால் வாய்க்காலை தூர்வாரி நீரில் மூழ்கிய நெற்பயிரை காப்பாற்றி உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இறங்கி கோஷங்கள் எழுப்பி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..