தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300 . கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொது மக்களிடமிருந்து 300 மனுக்களை பெற்றுக்கொண்டார்
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டு மனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் 300. கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பணியிடத்து விபத்து மரண நிவாரணத் தொகையாக ரூபாய் 5 லட்சம் வீதம் 2, நபருக்கும் வாரிசுதாரர்களுக்கும் விபத்து மரணம் நிவாரணத் தொகையாக வாரிசுதாரர் ஒருவருக்கு 2 லட்சத்து 5 ஆயிரத்து க்கான காசோலையினையும் மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை பரிசாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி ஊரக வளர்ச்சி முகமை திட்ட அபிதாஹனிப் இயக்குனர் தனித்துணை ஆட்சியர் சண்முகசுந்தரம் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சம்பூர்ணம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது உதவி ஆணையர் கலால் முத்துச்செல்வி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.