கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வால்பாறை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கே.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத் தலைவர் கோ.சசீந்திரன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மகளிரணி செயலாளரும் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் ஒன்றிய மாநில பொதுச்செயலாளருமான கு.சுகன்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் இல.முரளி கலந்து கொண்ட நிலையில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் தா.அமிர்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சிறப்பான செயல்பாடுகளால் தான் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டன
என்றும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையில் பணியாற்றும் தினக்கூலிப்பணியாளர்கள், சத்துணவுக் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் பெற்றுத்தர தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார் சிறப்பாக நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் இரா.மூர்த்தி, மாவட்ட மகளிரணி துணைத்தலைவர் ம.கார்த்திகாம்பிகா, மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் கவிதா, மாவட்ட தணிக்கையாளர் பா.தமிழ்செல்வன் மாவட்ட ஆலோசகர் செந்தில் குமார், நகராட்சி மேலாளர் கே.செந்தில்வேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, வட்டக்கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் கூட்டமுடிவில் வட்டக்கிளை செயலாளர் கி.ராம்குமார் நன்றி கூறினார்