புதுச்சேரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு, புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொய்வழக்கு ஆகியவற்றைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.
திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு, நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது புதுச்சேரி பல்கலைக்கழகம் மாணவர்களின் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமையில் புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் தி.இராசா, திண்டிவனம் மாவட்டத் தலைவர் இர.அன்பழகன், செயலாளர் தா.இளம்பரிதி ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகப் பொருளாளர் மானமிகு .வீ. குமரேசன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பல்வேறு பொதுநல இயக்கத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் மற்றும் திண்டிவனம் மாவட்ட கழக தோழர்களும் , பொதுநல அமைப்பு தோழர்களும் கலந்து கொண்டனர்.