கும்பகோணம் கரிகால் சோழன் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வலங்கைமானில் தீபாவளி பண்டிகைக்கு நீராடுவதற்கு பொதுமக்களுக்கு கங்கை தீர்த்தம் வழங்கப்பட்டது. இது குறித்து ஆய்வு மையத்தின் நிறுவனர் முனைவர் ஆதலையூர் சூரியகுமார் கூறுகையில்:- ஆண்டு தோறும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு கங்கா ஸ்நானம் செய்வதற்காக கங்கை தீர்த்தம் வழங்கி வருகிறோம்,
அந்த வகையில் இந்த ஆண்டும் புவனேஸ்வரி கல்யாணசுந்தரம் (எம். பி), வள்ளலார் அன்பர்கள், சமூக சேவகர்கள், வங்கி அலுவலர்கள், ஆசிரியர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கங்கை தீர்த்தமும், இனிப்பும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறோம்.
இந்த புனிதமான நன்னாளில் கங்கை தீர்த்தம் வழங்குவதால் அதைப் பெறும் பொதுமக்கள் நெகிழ்ச்சியாக உணர்கிறார்கள். அதனால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக கங்கை தீர்த்தம் வழங்கி வருகிறேன் என்றார்.