கோவையில் நூற்றாண்டுகளாக செயல்படும் பழமை வாய்ந்த பி.எஸ்.ஜி.சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி அறக்கடளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினராக ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,நாட்டின் முக்கிய தலைவர்கள் அதிகம் வந்து சென்ற பள்ளி என பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள சர்வஜன பள்ளி உருவாகிய வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்..

இந்திய நாட்டின் தேசிய கீதத்தை உருவாக்கிய இரவிந்திரநாத் தாகூர் சர்வஜன பள்ளிக்கு வந்து தேசிய கீதமாக அங்கீகரிக்கபடுவதற்கு முன்பே தேசிய கீத பாடலை முதன் முறையாக சர்வஜன பள்ளியில் வந்து பாடியுள்ளதை அவர் நினைவு கூர்ந்தார்..

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,சர்வஜன பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களான அமெரிக்க தொழிலதிபர் கோபால் சடகோபால், , கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர்,முதன்மை விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் பாரிவள்ளல், சேலம் ஹெலிக்ஸ் ஓபன் ஸ்கூல் மற்றும் லெர்னிங் சென்டர் இணைச்செயலர் சசிகலா ஆகியோருக்கு சீரார்ந்த முன்னாள் மாணவர் விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பள்ளியின் நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது.

விழாவில் பி.எஸ்.ஜி நிறுவனங்களின் தலைவர் ஜி.ஆர்.கார்த்திகேயன், பள்ளியின் செயலர் நாராயணசாமி, உட்பட சர்வஜன பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *