கமுதியில் அன்னக் குவியலுக்கு நாமமிட்டு மகேஸ்வர பூஜை செய்து 5000 பேருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி இராமானுஜ பஜனை மடத்தில் நேற்று
மகேஸ்வர பூஜை நடைபெற்றது.கமுதி -கௌரவ செட்டியார்தெருவில் உள்ள ராமானுஜ பஜனை மடத்தில் வருடா வருடம்,புரட்டாசி மாதம் இந்த மகேஸ்வர பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பஜனை மடத்தை சார்ந்தவர்கள் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கமுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பஜனை பாடல் பாடி, வீடுதோறும்பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட அரிசியுடன் 500 படி அரிசி மற்றும் ஒரு டன் காய்கறிகள் கொண்டு, புரட்டாசி ஐந்தாவது வார சனிக்கிழமையாக நேற்றைய தினத்தை, கணக்கில் கொண்டு, பெறப்பட்ட அரிசியை சமைத்து, பஜனை மடத்தில் அரிசி சாதம் குவிலாக வைத்து, பூக்கள் மற்றும் மலர் மாலையால் அதற்கு நாமம் இட்டு அலங்கரித்து மகேஸ்வர பூஜை நடைபெற்றது.
மேலும் சாம்பார், பொறியல் உள்ள பாத்திரங்களுக்கும் நாமமிட்டு, சாம்பர், ரசம், 16 வகை காய்கறிகளால் தயார் செய்யப்பட்ட கூட்டு மற்றும் பாயாசம் என பிரம்மாண்டமான அன்னதானம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானத்தில் 5000 பேர் உணவருந்தி சென்றனர். அன்னத்திற்கு மகேஸ்வர பூஜை நடந்த போது ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு திருப்பாவை பாடினர். இந்த மகேஸ்வர பூஜை கடந்த 1915 -ம் ஆண்டு முதல் நூறு ஆண்டுகளாக மேலாக நடைபெற்று வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.