துறையூர் ஆக-01
திருச்சி மாவட்டம் துறையூர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஸ்ரீ மகா கும்பலேசன் கருப்பு கோவில் 31-07-2026 அன்று காலையில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துறையூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் என்.தன்ராஜக்கு நரிக்குறவர் காலனி பெட்டக்கடை ராஜி,கோவில் விழா குழுவினர் சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய செயலாளர் தன்ராஜ் தலைமையில் சுமார் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இவ்விழாவில் கலந்து கண்டு அன்னதானம் வழங்கிய அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ்க்கு கோயில் விழா குழுவினர், நரிக்குறவர் இன நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
இந்த விழாவில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி மருதமுத்து, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் குரு, மதுராபுரி மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மதுராபுரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் செல்லமுத்து, மதுராபுரி கிளைச் செயலாளர் தம்பிதுரை, முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் நாகராஜ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தம்பிதுரை, ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், நரிக்குறவர் இன சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்