தருமபுரி அருகே கடந்த 3 தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்பு. காவல்துறையினர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது – சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்தது அம்பலம்.

தருமபுரி அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் சுதா தம்பதியினருக்கு மதியரசு என்கின்ற 6 வயது சிறுவனும் மற்றும் 3 வயதில் மற்றொரு குழைந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆதிமூலம் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள தொடக்க பள்ளிக்கு விளையாடச் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பெற்றோர் ஆங்காங்கே தேடி பார்த்தும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் கிராம மக்களிடமும் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்ட போது சிறுவனை பிரகாஷ் என்ற இளைஞர் அழைத்துச் சென்றதாக தகவல் தெரியவர பிரகாசை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில் சிறுவனை பயன்பாட்டின்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கொலை செய்து கட்டி போட்டதாக தெரிய வந்தது. பின்பு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் உள்ள சடலத்தை போலீசார் கை பற்றி விசாரணை செய்தனர்
இதில் சிறுவன் மதியரசுவை ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கூட்டிக்கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவனின் கை, கால் மற்றும் வாய் பகுதிகளை கட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து சிறுவன் வெளியே சொல்லி விடுவான் என்ற அச்சத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்து தொட்டியில் வீசப்பட்டார் என விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கொலை செய்த பிரகாஷ் கைது செய்யப்பட்ட நிலையில் கொளைக்கான காரணம் குறித்தும், இந்த கொலையில் வேறு யாரேனும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்து தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.