தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் கடங்கனேரி சமுதாய நலகூடத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மூலம் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் வேளாண்மை துணை இயக்குனர் ம.தி மற்றும் மா.தி ஊமைத்துரை அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் எம் .திவ்யா மணிகண்டன்,கடங்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ்ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கினார்கள்.
ஆலங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் அவர்கள் தென்னங்கன்று நடவு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா உதவி வேளாண்மை அலுவலர்கள் கணேசன் செந்தில்குமார் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வ கணேஷ் துணைத் தலைவர் , வார்டு உறுப்பினர் வடிவேல் முருகன், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.