மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து இன்று நாமக்கல்லில் திமுக மகளிர் அணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து அங்குள்ள பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில அரசையும், மத்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசையும் கண்டித்தும்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பி. எஸ். என். எல் அலுவலகம் முன்பு நடைபெற்றது
மாநில திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப. ராணி தலைமையில் நடந்தது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மணிப்பூர் பாஜக மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள் இதில் திமுக புதுக்கோட்டை விஜயா கலந்துகொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம், கு. பொன்னுசாமி உள்ளிட்ட மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்