தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ஆலங்குளம் ஒன்றிய குழு உறுப்பினர் சேக்முகமது தலைமையில் நடைப் பெற்றது.
வீராணம் கிளைகழக செயலாளர் பாலசுப்பிரமணியன்,
அமைப்புசார ஒட்டுநர் அணி நிர்வாகி அமனுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிதலைமை ஆசிரியர் மேரி ஜாஸ்மின் வரவேற்புரை வழங்கினார்
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழநி நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரை வழங்கினார்.
இந்த விழாவில் பள்ளி மேலான்மை குழு தலைவர் செல்லத்துரைச்சி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதி இருதாலய மருதப்ப பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் வாடியூர் மரியராஜ், பரமசிவன்,அன்சார் அலி, அப்துல் வகாப்,எஸ் கே சாதம் உசேன், காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டார தலைவர் கணேசன், சுரண்டை நகராட்சி உறுப்பினர் தெய்வேந்திரன், அமைப்புசார நிர்வாகி பிரபு, முன்னாள் காங்கிரஸ் தலைவர்முஸ்தப்பா, கமால், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உடனிருந்தனர் பள்ளி தலைமை துணை ஆசிரியர் சுப்பையா பாண்டி நன்றி கூறினார்.