சகாதேவன் கிருஷ்ணகிரி செய்தியாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு அப்துல் கலாம் ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் இல.முத்து தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் மு. திருப்பதி கலந்துக்கொண்டார்.
மரக்கன்றுகள் நட்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் அப்துல்கலாம் ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், அப்துல் கலாம் அவர்களின் கனவை நினைவாக்கும்வகையில் 10 உறுதிமொழிகளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் சிறப்பு விருந்தினர் மு.திருப்பதி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். விழாவில் ஆசிரியர்கள் திருமலை, லாவணியா, தீபா, தனலட்சுமி, அம்சா மற்றும் சமூக ஆர்வலர்கள் மாதன், முருகேசன், சேகர், அகிலன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.